தேர்தலில் யாருக்கு ஆதரவு? விஜய் பெயரில் பரவும் போலி கடிதம்

தேர்தலில் யாருக்கு ஆதரவு? விஜய் பெயரில் பரவும் போலி கடிதம்

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் கட்சியின் கொள்கைகள் எதிர்கால திட்டங்களை அறிக்கை வாயிலாக வெளியிட்டிருந்தார். பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கட்சி தொடங்கிய போதே விஜய் அறிவித்திருந்தார். இந்த நிலையில் சில தினங்களாக பாராளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெயரில் சில தகவல்கள் அறிக்கை மூலமாக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

அந்த அறிக்கை அனைத்து சமூக வலைதள பக்கங்களிலும் வைரலாக பரவியது. இதுபற்றி கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது....தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெயரில் தேர்தல் குறித்து சமூக வலைதளங்களில் தற்போது வெளியான தகவல் முற்றிலும் போலியானது. அந்த தகவல் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டது இல்லை இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision