திருச்சி அருகே நீரில் மூழ்கிய குழந்தைகள் - தேடும் பணி தீவிரம்!

திருச்சி அருகே நீரில் மூழ்கிய குழந்தைகள் - தேடும் பணி தீவிரம்!

Advertisement

திருச்சி மாவட்டம், சமயபுரம் பெருவளை வாய்க்கால் பாலம் அருகே வசிக்கும் ரவிசந்திரன் அனிதா தம்பதியின் குழந்தைகள் நரேஷ் (4), தர்ஷினி (6) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் இருவரும் இன்று இயற்கை உபாதைகளை கழிக்க பெருவளை வாய்க்கால் கரையோரத்தில் இருந்த போது தவறி விழுந்து வாய்காலின் நீரில் மூழ்கியுள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சமயபுரம் தீயணைப்பு படை வீரர்கள் இரு குழந்தைகளையும் தண்ணீரில் தேடி வருகின்றனர். இரவு நேரம் என்பதால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது காலை மீண்டும் துவங்கப்படும். ஒரே தம்பதியரின் இரு குழந்தைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் அப்பகுதியில் மிகுந்த சோகம் காணப்படுகிறது.