திருச்சிக்கு புதிதாக வந்த ஐபிஎஸ் அதிகாரிகள்!!

திருச்சிக்கு புதிதாக வந்த ஐபிஎஸ் அதிகாரிகள்!!

தமிழகத்தின் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் நேற்று இரவு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் செயலாக்கம் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். செயலாக்க பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் சென்னை காவல் ஆணையர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.மதுரை காவல் ஆணையர் பதவி வகிக்கும் டேவிட்சன் தேவாசீர்வாதம் தொழில்நுட்ப பிரிவு ஏடிஜிபி ஆக மாற்றப்பட்டுள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏடிஜிபி ரவி சிறப்பு காவல்படை ஈரோடு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நம்முடைய திருச்சி சரகத்தை பொறுத்தவரை மத்திய மண்டல ஐஜியாக ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த நிலையில் திருச்சி மண்டல காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்டார்.

Advertisement

ஏற்கனவே இருந்த மத்திய மண்டல ஐஜி அமல்ராஜ் சென்னை தலைமையிட ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். தஞ்சை டிஐஜியாக பதவி வைக்கும் லோகநாதன் ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணன் மாற்றப்பட்டு சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். திருச்சி மண்டல காவல்துறை துணைத் தலைவராக (DIG) ஆனி விஜயா ஐபிஎஸ் நியமனமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது மதுரை சரக டிஐஜி ஆக பணியாற்றி வந்த நிலையில் திருச்சி மண்டல டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். இவர் திருச்சியில் ரயில்வே எஸ்.பி.யாக இருந்தபோதுதான் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் ஸ்வாதி படுகொலை சம்பவம் நடந்தது. அப்போது ஸ்வாதி வழக்கு தொடர்பாக சென்னையில் விசாரணை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/Kg3GmWLVTmU