மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்!

மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்!

மத்திய பாஜக அரசை கண்டித்து திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய பாஜக ஆட்சியில் இந்திய நாட்டின் உரிமைகளை இழக்க கூடிய வகையிலும், சிறுபான்மையினர்களுக்கு அநீதி இழைக்கக்கூடிய வகையிலும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கெதிராக அமைதி வழியில் போராடிய மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்து சிறையில் அடைத்துள்ளதை கண்டித்தும், 1991 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வழிப்பாட்டுத் தலங்களின் சட்டத்தை மாற்ற கூடிய முயற்சியை எடுக்கப் பட்டு வரும் நடவடிக்கையை கண்டித்தும்,

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக தப்லீக் ஜமாஅத்தினர்களின் மீது வழக்கு தொடரப்பட்டும் வரும் நிலையை கண்டித்தும், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் வெளிநாடுகளில் தவித்து வரும் இந்தியர்களை மீட்டு வரும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருவதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான், வடக்கு மாவட்ட செயலாளர் , முன்னாள் மாவட்ட தலைவர் ஹாஜி வி.எம். பாரூக் மற்றும் எம்.எஸ்.எப்., யூத் லீக், எஸ்.டி யூ. மற்றும மற்றும் நிர்வாகிகள், பிரைமரி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். மேலும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.