திருச்சி மாநகர துணை ஆணையர் அலுவலகத்தில் 15 நாட்களாக குவிந்து இருக்கும் குப்பை கண்டுகொள்ளாத மாநகராட்சி

திருச்சி மாநகர துணை ஆணையர் அலுவலகத்தில் 15 நாட்களாக குவிந்து இருக்கும் குப்பை கண்டுகொள்ளாத மாநகராட்சி

திருச்சி கண்டோன்மென்ட் ஹீபர் சாலையில் மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் அலுவலகம் மற்றும் உதவி ஆணையர் அலுவலகம் இயங்கி வருகிறது. 25 காவலர் ஆய்வாளர்களுக்கான குடியிருப்புகளூம் உள்ளது. இது மட்டுமல்லாமல்  மாநகர ஸ்பெஷல் பிராஞ்ச் அலுவலகமும் உள்ளது. முக்கிய அலுவலகங்கள் மற்றும் காவல் ஆய்வாளர் குடியிருப்புகளில் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே மாநகராட்சி பணியாளர்கள் குப்பைகளை அள்ள வண்டிகளை அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது .

ஒவ்வொருமுறையும் 15 நாட்களுக்கு பிறகு தொடர்ந்து காவல் அதிகாரிகள் மாநகராட்சியை வலியுறுத்தி கேட்டுக் கொண்டதற்கு பிறகு குப்பையை வந்து சுத்தம் செய்வதாகவும் குறிப்பிடுகின்றனர்.அதுமட்டுமல்லாமல்  குடிநீர் பைப் உடைந்து வழிந்து ஓடுகிறது .  குப்பையால்  காவல் குடியிருப்பில் வசிப்பவர்கள்  நோய் பரவும் அச்சத்தில் உள்ளதாக குறிப்பிடுகின்றனர்.    

துணை ஆணையரை சந்திக்க பொதுமக்கள்காவல் அதிகாரிகள் மற்றவர்கள் வரும் நிலையில் இப்பகுதி குப்பைகள் நிறைந்த பகுதியாக காட்சியளிக்கிறது உடனடியாக மாநகராட்சி இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு மிக அருகாமையிலேயே இந்த காவல் அலுவலகங்கள் குடியிருப்புகள் உள்ளது .இப்பகுதியிலேயே 15 நாட்களுக்கு ஒரு முறை குப்பையை சுத்தம் செய்ய வலியுறுத்தப்பட வேண்டியுள்ளதாக காவல் குடியிருப்பில் வசிப்பவர்கள் வேதனையுடன் குறிப்பிடுகின்றனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW