திருச்சி மாவட்டத்தில் 7 கோட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட மின் பராமரிப்பு பணிகள்

திருச்சி மாவட்டத்தில் 7 கோட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட மின் பராமரிப்பு பணிகள்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருச்சி மின்பகிர்மான வட்டத்தின் செய்தி குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் அறிவுரைப்படி தமிழகம் முழுவதும் தற்பொழுது ஏற்படும் அதிக மின்தடைகளை போர்கால அடிப்படையில் 10 நாட்களுக்குள் சரி செய்யும் பொருட்டு 19.06.2021 முதல் 28.06.2021 வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருச்சி மின் பகிர்மான வட்டம் பெருநகரம் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருச்சி மாவட்டத்தில் 7 கோட்டங்களில் உள்ள 52 துணை மின் நிலையங்களில் 96 மின்னூட்ட பாதைகளில் கடந்த 22.06.2021 முதல் 24.06.2021 வரை சுமார் 500 பணியாளர்களை கொண்டு பராமரிப்பு பணிக்கான மின்நிறுத்தம் செய்யப்பட்டு 2294 இடங்களில் மின் பாதைக்கு அருகில் மற்றும் மின்பாதைக்கு கீழ் உள்ள மரங்கள் வெட்டப்படுள்ளன.

238 இடங்களில் உள்ள பழுதடைந்த மின் இணைப்புகள் சரி செய்யப்படும், 40 இடங்களில் உள்ள தொய்வான மின் பாதை கம்பிகள் சரி செய்யப்படும், 61 இடங்களில் உள்ள சாய்வான மின்கம்பங்கள் நிமிர்த்த பட்டும், 100 இடங்களில் உள்ள பகுதி திறப்பான்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் மீதமுள்ள பணிகள் வரும் 28.06.2021ல் முடிக்க ஆவண செய்யப்பட்டுள்ளது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW