கள்ளக்குறிச்சி அடுத்து ஸ்ரீரங்கம் பள்ளி அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் - பரபரப்பு
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் வைஜெயந்தி மெட்ரிக்குலேஷன் பள்ளி செயல்படுகிறது. இந்த நிலையில் இன்று (20.07.2022) வழக்கம் போல பள்ளி முடிந்ததும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது 5ம் வகுப்பு படிக்கும் மாணவன் சந்தோஷ் என்பவரின் பெற்றோர்கள் யாரும் வரததாதால் அந்த மாணவன் அருகில் உள்ள பெரியப்பா வீட்டிற்கு சென்றுள்ளான். தாமதமாக பள்ளிக்கு வந்து அவனை அழைத்து செல்ல வந்தபோது மாணவனை காணவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவர்கள் பள்ளி முழுவதும் தேடி உள்ளனர்.
அதற்குள் மாணவனை காணவில்லை என்று தகவல் அவர்களது உறவினர்களுக்கு பரவி உள்ளது. பின்னர் அவர்களும் பள்ளிக்கு வந்து மாணவனை காணவில்லை என்ற ஆத்திரத்தில் பள்ளியின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி உள்ளனர். மேலும் பள்ளியிலிருந்த பள்ளி தாளாளர், மேலாளர், உடற்கல்வி ஆசிரியர், வாட்ச்மேன் ஆகியோரை தாக்கி உள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் ரகளையில் ஈடுபட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மாணவன் காணாமல் போனது குறித்து விசாரிக்க தொடங்கி உள்ளனர். பெற்றோர்கள் தாமதமாக வந்ததால் வீட்டுக்கு சென்ற மாணவன் அங்கும் பெற்றோர் இல்லாததால் பெரியப்பா வீட்டிற்கு சென்று அமர்ந்து இருப்பது தொியவந்தது. இதனைை அடுத்து பள்ளி மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கைை எடுக்கக்கோரி பள்ளி உதவி தலைமை அளித்த புகாரின் பேரில் மாணவனின் தந்தை சிவா அவரது நண்பர் தாமரைக்கண்ணன், சிவாவின் அண்ணன் பிரசன்னா ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவனின் தந்தை சிவா இவரது நண்பர் தாமரைக்கண்ணன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இப்பள்ளியை ஆண்டவன் கல்லூரி வாங்கி நடத்தி வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO