பள்ளி மாணவ மாணவிகளுக்கு நூலக உறுப்பினர் அட்டை வழங்கல்
திருச்சி தென்னூர் சுப்பையா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் வரவேற்றார். திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். கிளை நூலகர் புகழேந்தி பேசுகையில், மாணவர்கள் பாட நூல்களோடு பிறநூல்களை நூலகம் சென்று கற்று வந்தால் பல்துறை அறிவுடைய சிறந்த மாணவராக உருவாகுவார்கள்.
நூலகத்தில் சங்ககால இலக்கியங்கள் இடைக்கால இலக்கியங்கள், இக்கால இலக்கியங்கள், இலக்கண நூல்கள் சமய நூல்கள், தத்துவநூல்கள், வரலாற்று நூல்கள், கதைகள், புதினங்கள், சிறுகதைகள், படக்கதைகள், நாடகங்கள், இயல், இசை, சிற்பம், ஓவியம் பற்றிய பல்கலை நூல்கள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், கதைகள், பயணக் கட்டுரைகள், அறிவியல் புதுமைகள், சுற்றுலாச் சிறப்புகளுடன் கூடிய வரலாற்று நூல்கள் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நூலகத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்கள் நூலகம் சென்று படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். நூலகத்தில் ‘படிப்பறை Reading Room’ உள்ளது. அங்கு நாளிதழ், வார இதழ், மாத இதழ், காலாண்டிதழ், அரையாண்டிதழ், ஆண்டிதழ்கள், மலர்கள் உள்ளன.
நூலகத்தில் உள்ள நூல்களை விதிகளுக்கு உட்பட்டு நூலகத்திற்கு வெளியே உறுப்பினர்கள் எடுத்துச் செல்லவும் உரிய நாளில் திருப்பிக் கொண்டுவந்து சேர்ப்பிக்கவும் வேண்டும் எனக் கூறி புதிய உறுப்பினராக சேர்ந்த மாணவர்களுக்கு உறுப்பினர் அட்டையினை வழங்கினார். நிறைவாக ஆசிரியை சகாயராணி நன்றி கூறினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO