திருச்சியில் தெளிவாகத் தெரிந்த சூரிய கிரகணம் ஆர்வமுடன் கண்டு ரசித்த பொதுமக்கள்
தமிழகத்தில் சூரிய கிரகணம் மாலை 5:14 மணி முதல் 5:45 மணி வரை தெரியும் என கூறப்பட்டது. அதன்படி திருச்சி அண்ணா அறிவியல் கோளரங்கம் மையத்தில் இந்த சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகளை அண்ணா அறிவியல் கோளரங்கம் மைய திட்ட இயக்குனர் அகிலன் செய்திருந்தார்.
அங்கு வந்த பொதுமக்களுக்கு சூரிய கிரகணம் குறித்து ஓய்வு பெற்ற அறிவியல் அறிஞர் ஜெயபால் விளக்கம் அளித்தார். பின்னர் சூரிய கிரகணம் நிகழும் பொழுது அதை வெறும் கண்ணில் பார்க்கக்கூடாது என்று எச்சரித்தனர்.
மேலும் இந்த சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு சூரிய கண்ணாடி கொடுக்கப்பட்டது. அதன் மூலம் கண்டு ரசித்தனர். இதை தொடர்ந்து 5:40 மணியளவில் தெளிவாக சூரிய கிரகணம் தெரிந்தது. இதனை வெறும் கண்ணில் பார்க்க முடிந்தது.
தமிழகத்தை பொறுத்தவரை சூரியன் மறையும் நேரத்தில் இந்த சூரிய கிரகணம் நிகழ்ந்ததால் சிறிய அளவிலான கிரகணத்தை மட்டும் காண முடிந்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்தோடு கண்டு களித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO