வன உயிரினங்களை வேட்டையாடுதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்குரியது – வனத்துறை எச்சரிக்கை

வன உயிரினங்களை வேட்டையாடுதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்குரியது – வனத்துறை எச்சரிக்கை

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வன உயிரினங்களை வேட்டையாடுதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்குரியது என வனப்பகுதி அருகில் வாழும் பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மணப்பாறை வனச்சரகர் மகேஷ்வரன் அளித்துள்ள அறிக்கையில், கடந்த சனிக்கிழமை இரவு மணப்பாறை வனச்சரக அலுவலருக்கு மணப்பாறை வனச்சரக எல்லைக்குட்பட்ட பன்னப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள வெங்கடாசலபதி கரட்டில் வேட்டையாடுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வனச்சரக களப்பணியாளர்களைக் கொண்ட தனிக்குழு சம்பவ இடத்தை அடைந்து விசாரணையில் ஈடுபட்டது.

அப்போது வேட்டையாடுதல் ஏதும் தென்படவில்லை. ஆனால், சந்தேகிக்கும் படியாக இருந்த மூன்று நபர்களை, அவர்கள் உறவினர்கள் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் திங்கட்கிழமை வெங்கடாசலபதி கரட்டை சுற்றியுள்ள ஊர் முக்கிய தலைவர்களை அழைத்து வேட்டையாடுதலை தடுப்பதற்காக கலந்தாலோசிக்கப்பட்டது.

பின்னர், பாலக்கருதம்பட்டி, பெருமாப்பட்டி ஆகிய ஊர் மக்களுக்கு வேட்டையாடுதல் பற்றிய விழிப்புணர்வு, வேட்டையாடுவதால் ஏற்படும் இயற்கை சமநிலை, உணவுச்சங்கிலி பாதிப்புகள் மற்றும் வேட்டையாடுதலுக்கான தண்டனைகள் பற்றி அறிவுரை கூறினர். மேலும், மயில், முயல், உடும்பு, ஆகிய வன உயிரினங்களை வேட்டையாடுதலில் ஈடுபடுவோருக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என கடுமையாக எச்சரித்து வரப்பட்டது என தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn