2023ல் திருச்சியில் புதிய விமான நிலையம்

2023ல் திருச்சியில் புதிய விமான நிலையம்

இந்திய விமான நிலைய தென் மண்டல செயல் இயக்குனர் சஞ்சீவ் ஜிண்டால் திருச்சி விமான நிலையத்தில் கட்டப்படும் புதிய முனையத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சியில் கட்டப்படும் விமான நிலைய முனையம் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு வருகிறது. சூரிய மின் சக்தி, முனையம் முழுவதும் தானியங்கி முறை உள்ளிட்ட அனைத்து வகையிலும் நவீனப்படுத்தப்பட்டு அமைக்கப்படுகிறது.

இந்திய மற்றும் தமிழ்நாட்டின் கலை மற்றும் கலச்சாரத்தை உள்ளடக்கியதாக இருக்கும். புதிய முனையம் கட்டிமுடிக்கப்பட்ட பின்பு இந்திய விமான நிலையங்களிலேயே மிக மிக அழகான விமான நிலையமாக இது இருக்கும். இதற்கு நிச்சயம் பல்வேறு விருதுகள் கிடைக்கும். கட்டுமான பொருட்கள் அனைத்தும் மிகவும் தரமானவையாக உள்ளது. இதன் தரம் குறித்து மிகுந்த திருப்தி அடைந்துள்ளேன்.

ரூ.951 கோடியில் கட்ட தீர்மானிக்கப்பட்டது. ஆனால் கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தால் இப்பணிகள் ரூ.1000 கோடியில் நிறைவடையும். ஜீன் 2023 க்குள் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிட்டுள்ளோம். டிசம்பர் 2022 ல் பணிகளை முடிக்க திட்டமிட்டோம். ஆனால் கொரோனா, மழை போன்றவை காரணமாக காலதமதம் ஏற்பட்டுள்ளது. 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. 

புதிய முனையத்தில் 600 உள்நாட்டு பயணிகளையும் 2300 வெளிநாட்டு பயணிகள் என ஒரே நேரத்தில் 2900 பயணிகளை கையாள முடியும். கோவை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்களை ரூ.7000 கோடி செலவிட்டில் மேம்படுத்தவும் அதனை விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி விமான நிலையம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் பெரிய ரக விமானங்கள் கையாளும் வகையில் விரிவாக்கம் செய்யப்படும்.

சென்னை விமான நிலையத்தில் பழைய முனையங்கள் இடிக்கப்பட்டு அங்கு சரக்கு சேவை, விமான பயிற்சி மையம் போன்றவை அமைக்கப்படும். திருச்சியில் 1350 மீட்டர் நீளத்தில் விமான ஓடுதளம் தற்போது உள்ளது. அது 3115 மீட்டராக அதிகரிக்கப்படும் பட்சத்தில் பெரிய ரக விமானங்கள் வந்து செல்லலாம். அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் ஒரு ஆண்டில் நிறைவடையும் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO