"உணவகங்களில் உள்ள ஹலால் பெயரை எடுக்க வேண்டும் இல்லையென்றால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும்" - திருச்சியில் பூஜாரிகள் பேரவையினர் பேட்டி
Advertisement
திருச்சி ஸ்ரீரங்கத்தில் கிராம கோவில் பூஜாரிகள் பேரவை மற்றும் அருள்வாக்கு அருளும் பேரவை சார்பாக மாநில பொதுக் கூட்டம் நடைபெற்றது இதில் தமிழகம் எங்கும் உள்ள பல பகுதிகளிலிருந்து பேரவையினர் திருச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
Advertisement
தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் கோபால் ஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்...
அப்போது அவர்கள் பேசுகையில்.... எங்களின் கோரிக்கைகளை எந்த கட்சியினர் கேட்கிறார்களோ அவர்களுக்கு தான் எங்களுடைய முழுமையான ஆதரவு இருக்கும். ஹிந்துக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய ஓட்டு வங்கி ஒன்றை உருவாக்கியுள்ளோம். அரசாங்க அறநிலையத்துறையை ஆலயத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். கோவில்களில் பொதுமக்கள் வழங்கும் காணிக்கைகளை பூசாரிகளுக்கு மற்றும் கோவிலின் நலன்களுக்காக செலவழிக்க வேண்டும். மத மாற்றத்திற்கு தடை சட்டம் கொண்டு வரவேண்டும் சிலர் தூண்டுதலின்பேரில் இந்துக்களை மற்ற மதத்திற்கு மாற்றி வருகின்றனர்.
Advertisement
கோவில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு 7,500 ரூபாய் வழங்கவும் மேலும் மாதம் 2000 ரூபாய் வைப்பு நிதியாக வழங்கி பூசாரிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். தேடுதல் நெருங்கிவிட்டதால் ஸ்டாலின் போன்றோர் வேலாயுதம் ஏந்தி போலியாக நாடகம் நடத்தி வருகின்றனர்.
இஸ்லாமியர்கள் உணவை வைத்து மதவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உடனடியாக அனைத்து ஹோட்டலில் இருக்கும் ஹலால் என்கிற பெயரை எடுக்க வேண்டும் இல்லையென்றால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும்" என்றார்.