திருச்சி நெடுஞ்சாலையில் மேம்பால சுவர் இடிந்து விழுந்தது

திருச்சி நெடுஞ்சாலையில் மேம்பால சுவர் இடிந்து விழுந்தது

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிபட்டியில் உள்ள உயர்மட்ட பாலத்தில் தஞ்சை - திருச்சி செல்லும் சர்வீஸ் ரோடு பகுதியில் இன்று காலத்தின் பக்கவாட்டில் உள்ள சுவர் சுமார் 10 அடி உயரம் 5 மீட்டர் நீளம் அளவிற்க்கு சரிந்து விழுந்தது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட தொடர்ந்து பாலத்தின் மேல் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மேம்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் ரோட்டில் போக்குவரத்து மாட்டுப் பாதையில் விடப்பட்டது.

இடிந்து விழுந்த இடத்தில் உள்ள இடிபாடுகள் மற்றும் மண் அப்புறப்படுத்தப்பட்டு அந்த பகுதியில் சீரமைப்பு பணிகள் தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. 

தொடர்ந்து பாலம் இடிந்து விழுந்த பகுதியிலிருந்து மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் அடுத்தடுத்து பக்கவாட்டு சுவர் சரிவதால் தற்சமயம் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை முறையாக பராமரிக்கப்படுவதில்லை, செங்கிப்பட்டியில் சர்வீஸ் ரோடு சீர்கேடாக உள்ளது, வாகனங்கள் செல்வதில் பெரும் அவதி ஏற்படுகிறது. முறையாக வடிகால் பராமரிக்கப்படாததால் சாலையில் அதிக அளவு மழை நீர் தேங்குவதாக வாகன ஓட்டிகளும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn