திருச்சி மத்திய சிறையில் கரும்பு அறுவடை - விற்பனை

திருச்சி மத்திய சிறையில் கரும்பு அறுவடை - விற்பனை

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறைத் தோட்டத்தில் சுமார் 24 ஏக்கர் நிலப்பரப்பளவில் மா, பலா, வாழை, தென்னை, நெல்லி, கொய்யா போன்றவையும், தக்காளி, கத்தரிக்காய், பூசனிக்காய், முள்ளங்கி, பின்ஸ், அவரைக்காய், புடலங்காய், பரங்கிக்காய் போன்ற காய்கறிகளும் பயிரிடப்பட்டு வருகின்றன.

இதில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் கடந்த மார்ச் மாதம் கரும்பு பயிரிடும் பணி மேற்கொள்ளப்பட்டது. மத்திய சிறை வளாகத்தில் பயிரிடப்படும் கரும்பு சிறை அங்காடி மூலமாக பொதுமக்கள் வாங்கி செல்வதற்காக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கரும்பு விற்பனையானது அரசுக்கு லாபம் ஈட்டும் வகையிலும், பொதுமக்களுக்கு குறைந்த விலையிலும் கரும்பு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கரும்பு விற்பனையில் வரும் ஒரு பகுதியை சிறைவாசிகளின் ஊதியமாக வழங்க வழங்கப்படும். சிறையில் பணி புரியும் சிறைவாசிகளுக்கு மன அழுத்தம் இன்றி இங்கு பணி புரியவும் சிறையிலிருந்து விடுதலை பெற்று வெளியே சென்ற அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த உறுதுணையாக இருக்கும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn