திருச்சியில் தொடரும் லாட்டரி விற்பனை- அதிரடி கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தனிப்படை போலீசார்

திருச்சியில் தொடரும் லாட்டரி விற்பனை- அதிரடி கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தனிப்படை போலீசார்

திருச்சி மாநகர காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவின் படி தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு சட்டவிரோத லாட்டரி விற்பனை மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினரும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் உதவி காவல் ஆய்வாளர் நாகராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் துறையூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்து வந்த பாஷித் (48), ரவி (42) சுபாஷ் (28), சந்திர சேகர் (30) ஆகியோரை லாட்டரி சீட்டுகளுடன் பிடித்தனர்.

 

Advertisement

இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் , 4 செல்போன், இரண்டு இருசக்கர வாகனம் மற்றும் ரொக்கப் பணம் ரூபாய் 2,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து துறையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.