அஞ்சல்துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து DYFI சங்கத்தினர் போராட்டம்!!

அஞ்சல்துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து DYFI சங்கத்தினர் போராட்டம்!!

அஞ்சல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான தகுதித்தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அஞ்சல்தேர்வு விண்ணப்பத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

அஞ்சல்துறை காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய தமிழகத்தில் பிப்ரவரி 14ம்தேதி நடைபெறவுள்ள தேர்வில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்ற அஞ்சல்துறையின் அறிவிப்பினைக் கண்டித்தும், தமிழில் தேர்வு நடத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் லெனின் தலைமையில் இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் திருச்சி தலைமைத் தபால்நிலையம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

ஆர்பாட்டத்தின்போது அஞ்சல்துறை தேர்வு விண்ணப்ப படிவத்தை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டனர்.