திருச்சி சிறைக்காவலர் கோவிட் தொற்றால் பலி - முதல்வருக்கு கோரிக்கை மனு

திருச்சி சிறைக்காவலர் கோவிட் தொற்றால் பலி - முதல்வருக்கு கோரிக்கை மனு

திருச்சி மத்திய சிறையில் பணியாற்றிவந்த முதல் நிலை காவலர் நாராயணசாமி கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று(08.06.2021)இரவு மரணம் அடைந்தார். கடந்த 2011ஆம் ஆண்டு சிறைத்துறையில்  பணியில் சேர்ந்தார்.பத்து வருடங்கள் மட்டுமே பணியாற்றி இருக்கிறார். தற்போது 31 வயதாகும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தமிழகத்தில் சிறைத் துறையில் இதுவரை 10த்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். தமிழக காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு கோவிட் நிவராண உதவி ஊக்கதொகை,சலுகைகளும் தமிழக அரசு அறிவித்துள்ளது.சிறைத்துறையில் பணியாற்றுபவர்களையும் களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சிறைத்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது காவல்துறைக்கு அறிவிக்கும் அனைத்து சலுகைகளும் சிறை துறைக்கும் பொருந்தும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதனை தற்போது நினைவுகூர்ந்து அதேபோல் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சிறைத்துறையினர் மீது பரிவு காட்டி அவர்களின் குடும்பத்தினரும் காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிறைத்துறையில் பணியாற்றிய பொழுது கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு இதுவரை எந்தவித நிதியுதவியும் இதுவரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC