செவிலியர்களுக்கான நேர்முக தேர்வில்  மணக்கோலத்தில் வந்து புதுமணத் தம்பதியினர் பங்கேற்பு

செவிலியர்களுக்கான நேர்முக தேர்வில்  மணக்கோலத்தில் வந்து புதுமணத் தம்பதியினர் பங்கேற்பு

திருச்சி மாவட்டத்திற்கு 58 மினி கிளினிக்குள் அமைத்து கொள்ள தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இதுவரை 35 மினி கிளினிக்குகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  கிராமபகுதியில் இருக்கக் கூடிய ஏழை - எளிய மக்கள் மருத்துவ வசதியினை எளிதாகவும். இலவசமாகவும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த மினிகிளினிக் திட்டம் கொண்டு வரப்பட்டது. இங்கு ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், உதவியாளர் என பணியில் இருப்பார்கள். சர்க்கரை நோய், காய்ச்சல், சளி, இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

இந்நிலையில் இந்த அம்மா மினி கிளினிக்கில் செவிலியர் மற்றும் உதவியாளர்கள் பணிபுரிவதற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களான நேர்முகத் தேர்வு திருச்சி மாவட்ட ஆட்சியர் அங்கு கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான விண்ணப்பதாரர்கள் வந்திருந்து நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டனர்.

அப்போது திருச்சியைச் சேர்ந்த மகேஸ்வரன் - ராகவி ஆகிய இருவருக்கும் திருமணம் இன்று நடைபெற்றது. இந்நிலையில் செவிலியர் பணிக்கு விண்ணப்பித்திருந்த ராகவி மணக்கோலத்தில் தனது கணவருடன் வந்து நேர்முக தேர்வில் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH