திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தொழிலாளர்கள் AITUC சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 

திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தொழிலாளர்கள் AITUC சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 

முன்கள பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். கொரோனாவால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூபாய் 25 லட்சம் நிவாரணமும், ஒருவருக்கு அரசு பணியும் வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு பணியிடத்தில் ஆக்ஸிமீட்டர், வெப்பமானி மூலம் உடல் பரிசோதனை செய்திட வேண்டும்.

முககவசம், சானிடைசர், உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அன்றாடம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளாட்சி தொழிலாளர்கள் AITUC சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி முன்பு நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் வீரன் தலைமை வகித்தார். அரசு போக்குவரத்து AITUC  செயலாளர் VV செல்வராஜ் சிறப்புறையாற்றினார். ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

இதே போன்று மணப்பாறை நகராட்சி தூய்மை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார், மாமுண்டி, பிச்சை, காளிமுத்து முன்னிலையில் மாவட்ட பொறுப்பாளரும், அரசு போக்குவரத்து AITUC பொதுச்செயலாளருமான சுப்பிரமணியன், உள்ளாட்சி AITUC  துணைச்செயலாளர் ஜனசக்தி உசேன் சிறப்புறை நிகழ்த்தினர் . நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve