கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 5 வருட சிறை தண்டனை மற்றும் அபராதம்

கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 5 வருட சிறை தண்டனை மற்றும் அபராதம்

திருச்சி மாநகரம், உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாச்சியார் பாளையத்தில் உள்ள காமராஜர் கல்விக்கூடத்தில் ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பயிற்சி பெற்று வந்த காயத்திரி என்பவர் தனது தோழியுடன் மேற்படி கல்விகூடத்தில் உள்ள அறையில் இருந்த போது அடையாளம் தெரியாத ஒருவர் அறையினுள் புகுந்துள்ளார்.

பின்னர் காயத்திரியிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகைகளை (செயின் மற்றும் வளையல்) கொள்ளையடித்து சென்றதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் உறையூர் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கினை உறையூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அவர்கள் புலன் விசாரணை செய்து, மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட கே.கே.நகர், சிம்கோ மீட்டர் ரோடு, தேவராயர் நகரைச் சேர்ந்த லியோ (எ) ரெனால்டு ரோஸ் லியோ என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வழக்கின் புலன் விசாரணை முடிந்து எதிரியின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, வழக்கு கோப்பிற்கு எடுக்கப்பட்டது.

பின்னர் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடித்து, இன்று 13.10.2021-ம் தேதி மேற்படி லியோ (எ) ரெனால்டு ரோஸ் லியோ என்பவருக்கு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதம் ரூபாய்.5000/- விதித்து, திருச்சிராப்பள்ளி முதன்மை குற்றவியல் நீதிமன்ற நடுவர் P.சாந்தி தீர்ப்புரை வழங்கினார்கள்.

இக்கொள்ளை வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளினர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாரட்டினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn