வேலை வாய்ப்பு பதிவை புதுப்பிக்க காலஅவகாசம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

வேலை வாய்ப்பு பதிவை புதுப்பிக்க காலஅவகாசம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, பல்வேறு காரணங்களினால் தங்களது பதிவினை 2014, 2015, 2016, 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் (01.01.2014 முதல் 31.12.2019 வரை) புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பதிவுமூப்பினை மீளப்பெறும் வகையில், மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக்கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழக அரசின் அரசாணை (டி) எண்:548, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு(ட்டி2)த் துறை, நாள்: 02.12.2021-ன் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.

மேற்காணும் அரசாணையில் தெரிவித்தவாறு இச்சலுகையைப் பெறவிரும்பும் பதிவுதாரர்கள் இவ்வரசாணை வெளியிடப்பட்ட நாளான (02.12.2021) முதல் மூன்று மாதங்களுக்குள் அதாவது 01.03.2022-க்குள் வேலைவாய்ப்புத்துறை இணையம் https://tnvelaivaaippu.gov.in/வாயிலாக தங்கள் விடுபட்ட பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம்.  

அவ்வாறு இணையம் வாயிலாக புதுப்பிக்க இயலாதவர்கள் 01.03.2022க்குள் திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்து அல்லது நேரில் அணுகி புதுப்பித்துக் கொள்ளலாம். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் அணுகும் பதிவுதாரர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து வரவேண்டும் என்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn