திருச்சியில் 56 ஏக்கரில் மியாவாக்கி குறுங்காடு - அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சியில் 56 ஏக்கரில் மியாவாக்கி குறுங்காடு - அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமணமேடு கொள்ளிடக்கரை படுகை பகுதியில் 56 ஏக்கரில் மியாவாக்கி குறுங்காடு உருவாக்கும் விழாவை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சிவராசு லால்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மரக்கன்றுகளை நட்ட அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில்... இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் கொள்ளிடம் ஆற்றின் கரை படுகைப் பகுதியில் மியாவாக்கி முறையில் 56 ஏக்கர் பரப்பளவில் 8 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்து குறுங்காடு உருவாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் சுத்தமான காற்றினை சுவாசித்திடவும், நிலத்தடி நீர் மட்டம் நிலை நிறுத்தப்படவும், அதிக அளவிலான பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழும் உயிர்ச்சூழல் மேம்படவும் வாய்ப்புகள் உருவாகும்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை, நீர்வள ஆதார துறை செயற்பொறியாளர் மன்மோகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn