மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் ஒரு போதும் மக்களின் இழப்பை ஈடு செய்யாது - திருச்சியில் முத்தரசன் பேட்டி!

மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் ஒரு போதும் மக்களின் இழப்பை ஈடு செய்யாது - திருச்சியில் முத்தரசன் பேட்டி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்.... ஒரே கட்சி ஒரே ஆட்சி என்கிற சர்வாதிகார நிலைக்கு நாட்டை கொண்டு செல்ல மத்திய பாஜக தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் ஆபத்து. 

Advertisement

இதை முறியடிக்கக் கூடிய வகையில் அனைத்த ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும். இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் ஒரு போதும் மக்களின் இழப்பை ஈடு செய்யாது. அடிப்படையில் செய்ய வேண்டிய பாதுகாப்பு அம்சங்களை அரசு முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் நிர்பந்தத்தின் மூலம் மருத்துவ மேற்படிப்பிற்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்தாண்டு நடைமுறைப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. 

Advertisement

இது போன்ற செயல்கள் இட ஒதுக்கீடு என்பதை முழுமையாக இல்லாமல் செய்யும் முயற்சி. இது சமூக நீதிக்கு எதிரானது, அனைத்து மக்களும் இதை எதிர்த்தும் போராட வேண்டும். ஒரே தேர்தல் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது. நாடு முழுவதும் வெவ்வேறு நேரங்களில் தேர்தல் நடத்துவதால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகிறது என பிரதமர் கூறுவது வெறும் காரணங்கள் தான். ஆனால் அவர்களின் நோக்கம் என்பது வேறு. 

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு யுத்ததை நடத்துகிறது. அந்த யுத்தத்திற்கு எதிராக விவசாயிகள் போராடுகிறார்கள். விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள இந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என கூறினார்.