ஒரு பவுன் நகைக்காக கை, கால்களை கட்டி மூதாட்டி கொலை - திருச்சியில் பயங்கரம்!

ஒரு பவுன் நகைக்காக கை, கால்களை கட்டி மூதாட்டி கொலை - திருச்சியில் பயங்கரம்!

திருச்சி சங்கிலியாண்டபுரம் நாகம்மை தெருவில் வசித்து வருபவர் ஆனந்தி( வயது 78)
அவர் இறந்து விட்ட நிலையில் இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் அவருடைய மகன் குமார்  தனது தாயை  பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றுள்ளார், கதவை பலமுறை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக பார்த்த போது கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் தனது தாய் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

Advertisement

இதனையடுத்து பாலக்கரை காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது,
பின்னர் அக்கம்பக்கத்தினர் வந்து கதவை உடைத்து பார்த்த போது அவர் அணிந்திருந்த தோடு மற்றும் நகைகள் கழட்டப்பட்டு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து பாலக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.