திருச்சியில் கோர விபத்து குழந்தை உட்பட 6 பேர் பலி
திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே திருவாசியில் லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் வேனில் பயணம் செய்த சிறுமி உள்ளிட்ட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேனில் பயணம் செய்த மேலும் இரண்டு பேர் படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் .
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த எட்டு பேர் கும்பகோணத்திற்கு ஆம்னி வேனில் வந்தனர். வேன் திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே திருவாசி என்ற இடத்தில் வந்த போது திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி விறகு ஏற்றிச் சென்ற லாரி மீது ஆம்னி வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், லாரி மீது மோதியது. இதில் வேனில் பயணம் செய்த சிறுமி உள்ளிட்ட டிரைவர் மற்றும் ஐந்து ஆண்கள் என ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் வேனில் பயணித்த இருவர் படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த கோர விபத்தினால் திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது .
சம்பவ இடத்திற்கு நேரில் வந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் விபத்து குறித்து நேரில் ஆய்வு நடத்தினார். உயிரிழந்த ஆறு பேரும் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து வாதலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn