உறையூர் வெக்காளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா - காவிரியிலிருந்து 1000 பக்தர்கள் புனித நீர் எடுத்து வந்தனர்

உறையூர் வெக்காளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா - காவிரியிலிருந்து 1000 பக்தர்கள் புனித நீர் எடுத்து வந்தனர்

தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் சிறப்பு வாய்ந்தது திருச்சி உறையூரில் உள்ள வெக்காளியம்மன் ஆலயம். மிகவும் பிரசித்திபெற்ற இவ்வாலயத்தில் அம்மன் மக்களின் குறைதீர்ப்பதற்காக மேற்கூரையின்றி அருள்பாலித்து வருகிறார். இவ்வாலயத்தில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தால் திருமணத்தடை, மற்றும் புத்திர தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இத்தகைய சிறப்பு வாய்ந்த உறையூர் வெக்காளியம்மன் திருக்கோவிலில் 12 ஆண்டுக்கு ஒரு முறை ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம், அதன்படி திருக்கோவில் அர்த்தமண்டபம் கருங்கற்களால் கட்டப்பட்டு அதனைத் தொடர்ந்து திருக்கோவில் உணர அமைப்பு செய்யப்பட்டு திருப்பணிகள் நிறைவுற்று, ஏக வர்ணம் பூசப்பட்டு 6ம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேக முதல் நிகழ்வாக நேற்றையதினம் விநாயகர் வழிபாடு மற்றும் வாஸ்து ஹோமம் நடைபெற்று அதனை தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று திருமஞ்சனம் எடுத்துவரப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

காவிரியின் தென்கரையிலிருந்து அய்யாளம்மன் படித்துறையிலிருந்து யானை மீதும், ஆயிரக்கனக்காண பக்தர்கள் தங்கள் தலையின் மீதும் திருமஞ்சன தீா்த்தத்தை மேளதாளங்கள் மற்றும் செண்டை மேளங்கள் முழங்க பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக வெக்காளியம்மன் ஆலயத்திற்கு கொண்டு வந்து வெக்காளியம்மன் உற்சவருக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். 

தொடர்ந்து வெக்காளியம்மன் சன்னதி முன்புறம் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, நவக்கிர ஹோமம் மற்றும் மகாலட்சுமி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கியது அதனைத் தொடர்ந்து இன்று மாலை முதலாம் கால யாகசாலை பூஜைகளும் தொடங்கி நடைபெறுகிறது.

ஜூலை 6-ம் தேதி புதன்கிழமை சப்தியும் உத்திர நட்சத்திரமும் கூடிய சுபயோக தினத்தில் காலை 6.45 மணிக்கு கடக லக்கினத்தில் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் வெக்காளியம்மன் கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.....
https://t.co/nepIqeLanO