திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் கார் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் கார் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைத்தீர் கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர்.

இந்த நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு விடியல் இரத்த சர்வீஸ் அமைப்பின் தலைவர் வேலன் தனது கார் மீது ஏறி திடீர் போராட்டம் நடத்தினார். போராட்டத்தில் ஈடுபட்ட நபரிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் அன்பு, தனக்கு சொந்தமான வீடு மற்றும் நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், அதனை மீட்டு தர வேண்டும் என்று தெரிவித்தார். பின்னர் அனுமதியின்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கார் மீது ஏறி போராட்டம் நடத்திய வேலன் என்பவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision