ஸ்ரீ சீதாராமன் திருக்கல்யாண விழா

ஸ்ரீ சீதாராமன் திருக்கல்யாண விழா

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் நாகையநல்லூர் கிராமத்தில் ஸ்ரீ சீதாராமன் திருக்கல்யாண விழா நடைபெற்றது. இந்த விழாவானது நாகைநல்லூர் கிராமத்தில் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமர் பஜனை மடத்தில் ஆண்டுதோறும் சீதாராமன் திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டு வருவது வழக்கம்.

இதேபோல நிகழாண்டு 100வது ஆண்டு விழா மார்ச் மாதம் 30 ஆம் தேதி மஹாகணபதி பூஜை, கலச ஸ்தாபனம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, ஸங்கல்பம், மூலபாராயணம், ஸ்ரீ ராம ஷடாக்க்ஷரி ஹோமம், பூர்ணாஹுதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து, ஸாம்ராஜ்ய பட்டாபிஷேக பாராயணத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு ஸாம்ராஜ்ய பட்டாபிஷேக வைபவம், ஸீவாஸினி பூஜை, ஸ்ரீ ராம நவமி உஸ்ஸவம், ஸ்ரீ ராமபிரானுக்கு காப்பு சூட்டும் விழா நடைபெற்றன.

இந்த விழாவில் முக்கிய நிகழ்வான ஸ்ரீ சீதா கல்யாண மஸோத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த திருக்கல்யாண நிகழ்வில் தமிழக மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை நாகைநல்லூர் ஸ்ரீ ராமநாமநவமி மகோத்ஸவ ஸேர்டபிள் டிரஸ்ட் தலைவர் ஜி. பாலசுப்பிரமணியன் (ஸ்ரீ ராம்) திருச்சி, செயலாளர் டி சிவசுப்ரமணியன் (ஈரோடு), பொருளாளர் எஸ். ராமமூர்த்தி (சென்னை) மற்றும் நாகைநல்லூர் பக்தகோடிகள் செய்திருந்தனர். மேலும் நூறாவது ஆண்டு திருக்கல்யாண விழா என்பதால் பல்வேறு பாராயணம் நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision