மகாத்மா காந்தியின் பிறந்தநாள் - அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை
mahatma gandhi kn neru honor

அண்ணல் காந்தியடிகளின் 156 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து திருச்சி ரயில் நிலையம் எதிரில் உள்ள காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணல் காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்..
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மாநகராட்சி, மேயர் அன்பழகன், நகர்பொறியாளர் சிவபாதம் மாவட்ட நகர் ஊரமைப்பு குழு உறுப்பினர் வைரமணி, காதி கிராப்ட் உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்..
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்
அறிய...
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision