பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய குழிகளை அப்படியே விட்டு செல்லும் மாநகராட்சி
திருச்சி உறையூர் வார்டு 59 மேட்டு தெருவில் கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கு மேலாக பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் அப்படியே இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுபோன்ற பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்படும் குழிகளை மூடாமல் அப்படியே விட்டுச் செல்வது பல முறை நடந்து கொண்டிருக்கின்றது.
இதற்கு நேரடியாக அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை வைத்தும் சரியான நடவடிக்கை எடுக்காமல் மாநகராட்சியும் அலட்சியப்படுத்தி வருகின்றனர். அப்படியே மக்கள் போராட்டமாக மாறி இதற்காக போராடினால் தற்காலிகமாகவே அதனை சரி செய்து செல்கின்றனர். அப்படி சரி செய்யும் பொழுது இதற்கு முன் இரண்டு மூன்று முறை பணம் வாங்கி சென்றதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். சாலையில் மூடப்படாமல் கிடக்கும் இந்த குழியை சுற்றி தடுப்பு வேலி கூட மாநகராட்சி அமைக்கவில்லை. அவ்வழியே செல்லும் பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கின்றது.
அலட்சிய போக்கால் மாநகராட்சியில் விட்டு செல்லும் இந்த பணிகளுக்காக தங்களுடைய வேலைகளை விட்டு விட்டு பொதுமக்கள் போராட வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. எனவே இதுபோன்ற வேலைகளில் ஈடுபடும் அலுவலர்களையும் ஊழியர்களை மாநகராட்சியில் முறையாக கண்காணிக்க வேண்டும். மாதத்தில் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இது போன்று ஏதேனும் ஒரு பகுதியில் குழியைத் தோண்டி அப்படியே விட்டு செல்கின்றனர்.
மேட்டுதெரு குடியிருப்பு வாசியான விக்னேஷ் கூறுகையில்... என் வீட்டின் முன்பு தான் இந்த பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழி உள்ளது கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் மேலாகியும் இது பற்றிய தகவல் கொடுத்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை ஒவ்வொருமுறையும் இப்படிதான் வேலையைப் பாதியிலேயே விட்டு செல்கின்றனர். மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர் என்கிறார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx