திருச்சியில் சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள்

திருச்சியில் சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஸ்ரீரங்கம் தேவி தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்து பரிசுகளை வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட தொடக்க கல்வியாளர் பேபி, முன்னிலை வகித்தார். விடார்ட் குரூப் ஆஃப் கம்பெனி யூ எஸ் ஏ துணை தலைவர் ஆலிவர் சாம், இந்திய முதன்மை மேலாளர் சங்கரநாராயணன், குழந்தைகளுக்கு 100 மரக்கன்றுகளை வழங்கி அரசு பள்ளிகளுக்கு 61 ஆயிரம் மதிப்பில் ப்ரொஜெக்டர் வழங்கினார்கள். திருச்சி ரோட்டரி 3000 ஃபோனிக்ஸ் கிளப் மூலமாக அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் மற்றும் விழா ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

ரோட்டரி பீனிக்ஸ் தலைவர் விஜயலாயன் என் ஆர் ஐ ஏ எஸ் அகாடமி நிறுவனர் வாழ்த்துரை வழங்கினார். ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் சிவக்குமார், ஸ்ரீரங்கம் கோட்ட உதவி ஆணையர் வைத்தியநாதன், மாமன்ற உறுப்பினர்கள் ராதா, செல்வம் மணி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தினார். பல்வேறு போட்டிகளில் மாவட்ட மாநில அளவில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வாழ்த்து பெற்றனர்.

சிறப்பு குழந்தைகளின் சிறப்புத் திறன்களை விருந்தினர்கள் அவர்களின் பெற்றோர்களுடன் இணைந்து ரசித்து மகிழ்ந்தனர். அரசு பள்ளி மாணவர்கள் ஆட்சியருடன் ஆங்கிலத்தில் உரையாடினர். வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளி தலைமை ஆசிரியர் பூங்கொடி நன்றி கூறினார். கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பு பயிற்றுனர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

மாணவர்களுக்கான பயிற்சிகளை டயட் முன்னாள் முதல்வர் சிவக்குமார், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், ரங்கசாமி ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் மீனா, தலைமை ஆசிரியர் லில்லி ஃப்ளோரா, ஆசிரியர்கள் சிவகுமாரி, கீதா, சைவராஜ் மற்றும் சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision