லாட்டரி விற்ற 8 பேர் கைது - 20 ஆயிரம் ரூபாய், கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

லாட்டரி விற்ற 8 பேர் கைது - 20 ஆயிரம் ரூபாய், கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

திருச்சி மாநகரில் லாட்டரி புழக்கம் அதிகமாக இருப்பதாக மாநகர காவல் ஆணையருக்கு புகார்கள் வந்தன. இதனை அடுத்து மாநகரில் அனைத்து பகுதிகளிலும் அந்தந்த காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளில் பெண்களை துண்டு சீட்டில் எழுதி விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் பாலக்கரை மெயின் ரோட்டில் உள்ள மேம்பாலம் அருகே லாட்டரி விற்ற புதுக்கோட்டையை சேர்ந்த சூசை என்கிற அய்யனார் (40), இளையான்குடியை சேர்ந்த ஜெகன் (22), விஷ்ணு (23), பள்ளிபாளையத்தை சேர்ந்த அருண் பிரசாத் (24), கர்நாடகாவை சேர்ந்த ஆரோக்கியசாமி (20), 

திருச்சி பிள்ளைமாநகரை சேர்ந்த மரியமெர்குலிஸ் (47) மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த துரைமுருகன் (37) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.  மேலும் அவர்களிடமிருந்து 8 செல்போன்கள், ரூ.20 ஆயிரம், கார் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து பாலக்கரை மற்றும் காந்தி மார்க்கெட் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO