லால்குடியில் சப்தரிஷீஸ்வரர் கோவில் கொடியேற்ற விழா

லால்குடியில் சப்தரிஷீஸ்வரர் கோவில் கொடியேற்ற விழா

திருச்சி மாவட்டம், லால்குடியில் அமைந்துள்ள அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயிலில் பங்குனித் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நடைபெற்றது. லால்குடி அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயில் திருத்தவத்துறை என்னும் லால்குடியில் அமைந்துள்ளது. இக் கோயில் எழு முனிவர்களுக்கு அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்றும் இத்தலத்திற்கு திருத்தவத்துறை என்று அழைக்கப்படுகிறது.

இக்கோயிலில் பங்குனித் தேரோட்ட திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி தேரோட்ட விழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக கொடி மரத்தின் முன்பு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று. மிதுன லக்னத்தில் கோயில் கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இன்று இரவு சோமாஸ்கந்தர் புறப்பாடு நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து மார்ச் 16 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை தினசரி காலையில் பல்லாக்கில் புறப்பாடும், தினமும் இரவு 7 மணிக்கு அம்மன் நந்தி, காமதேனு, அன்னம், சிம்மம், சேஷம் ,பூதம் , யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் புறப்பாடும், திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் வருகின்ற 23 ம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கலை நயமிக்க 75 அடி உயரமுள்ள மிகப் பழமையான மரத்தாலான தேரில் சுவாமி எழுந்தருளி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது .

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நித்தியா தலைமையில் கோயில் குருக்கள் மகாதேவ் மற்றும் கோயில் பணியாளர்கள் லால்குடி இந்து சமய அறநிலைத்துறைஆய்வாளர் வெண்ணிலா மகாலட்சுமி ஆகியோர் செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision