தமிழக ஆசிரியர் கூட்டணி தேர்தல்

தமிழக ஆசிரியர் கூட்டணி தேர்தல்

திருச்சி மலைக்கோட்டையில் உருவாகி நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழக ஆசிரியர் கூட்டணியின் திருச்சி வருவாய் மாவட்டத்தேர்தல் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவி மினி ஹாலில் நடைபெற்றது.

தேர்தல் சிறப்பு பார்வையாளராக மாநிலத் தலைவர் மா.நம்பிராஜ் கலந்துகொண்டு இயக்கத்தின் தேர்தல் விதிகளையும், மற்ற இயக்க நடவடிக்கைகள் பற்றியும் சிறப்புரையாற்றினார். மேலும் தேர்தல் ஆணையர்களாக கரூர் மாவட்ட செயலாளர் ஆ.இருதயசாமி, கரூர் மாவட்ட தலைவர் பி. தமிழ்செல்வன் ஆகியோருடன் அரியலூர் வருவாய் மாவட்டம் , மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் துரை க. சுந்தரமூர்த்தி அவர்களும்சிறப்பாக தேர்தலை நடத்திக் கொடுத்தனர்

மாவட்ட பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் பட்டியல் : மாவட்ட தலைவர் மு.சௌந்தரராஜன், மாவட்டச் செயலாளர் லா. அந்தோணி எட்வர்ட் ராஜ், மாவட்ட பொருளாளர் மை.ஆரோக்கியராஜ், மாவட்ட மகளிரணி செயலாளர் ம.சாந்தி, சொருபமேரி, மாவட்ட தலைமை நிலைய செயலாளர் சே.தாமஸ் ராக்லாண்ட், மாவட்ட துணைத் தலைவர்கள் பி. பிரிட்டோ பாண்டியன், சு. புகழேந்தி மாவட்ட துணை செயலாளர்களாக சு. கனகராஜ், ச. தாமோதரன், ம.மனுநீதி, வி.சகாயசெல்வி,

மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர்களாக ஏ.எஸ். முகமது பஹிம் ஷெரிப் ஆகியோர் தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision