தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் பயிற்சி மற்றும் ஆயத்த பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி  தேர்தல் பயிற்சி மற்றும் ஆயத்த பணிகள் குறித்த  மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம்  இன்று நடைபெற்றது

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் பயிற்சி மற்றும் ஆயத்த பணிகள் குறித்த தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமையில் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, கரூர் உள்ளிட்ட 8மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்றிருந்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வழிகாட்டு மற்றும் பயிற்சி கையேட்டினை தேர்தல் ஆணையர் வெளியிட மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார்... எல்லா நிர்வாகமும், அரசும் மக்களிடம் இருந்தே தொடங்குகிறது. மக்கள் தான் எல்லாத்தையும் நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக இருக்கிறார்கள், உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் செப்டம்பர் 27 முதல் 4 மாதகால அவகாசம் மட்டுமே வழங்கியுள்ளது.

தேர்தலுக்கு தேவையான வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்குச்சாவடி மின்னணு இயந்திரங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்யப்பட வேண்டும். ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமரா மற்றும் வாக்கு எண்ணும் மற்றும் வாக்குச்சாவடி மையங்கள் சிசிடிவி பயன்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அதன்படி நடைமுறைபடுத்த உள்ளது. 

கடந்தகால குறைபாடுகளைச் சரிசெய்து தேர்தல் அலுவலர்கள் சிறப்பாக தேர்தல் பணியை மேற்கொள்ள வேண்டும், நவம்பர் 1ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது, காலம் குறைவாக இருப்பதால் திருத்தம் மற்றும் சரிபார்ப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். திருச்சி, மதுரை, கோவை, சென்னை 5இடங்களில் பெல் நிறுவன ஊழியர்களைக் கொண்டு மின்னணு வாக்கு இயந்திரங்கள் முதல்கட்ட சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. படிப்படியாக இதர மாவட்டங்களுக்கும் இப்பணி மேற்கொள்ளப்படும்.

உச்சநீதிமன்ற ஆணையை மதித்து தேர்தலுக்கு தயாராக வேண்டும் மண்டல ஆய்வுக் கூட்டத்தை நடத்துவதன் நோக்கம் தேர்தல் நடக்கப்போவதற்கு அதற்கு தெளிவான அறிகுறி, அதனை உணர்ந்து அனைவரும் ஒன்றாக ஒத்துழைப்பை நல்கி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்தித் தரவேண்டும் எனவும் அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn