முடிவுற்ற பணிகளை மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்த அமைச்சர்

முடிவுற்ற பணிகளை மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்த அமைச்சர்

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பல்வேறு முடிவுற்ற பணிகளை மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்துவைத்தார்.

மேலும் அண்ணா நகர், கும்பக்குடி வேலாயுதங்குடி ஆகியபகுதிகளில் மின் மாற்றியையும் நவல்பட்டு காவேரி நகர் 170 குடும்ப அட்டைதாரர் பயன்பெறும் வகையிலும், சூரியூர் பகுதியில் 500 குடும்ப அட்டைதாரர் பயன்பெறும் வகையிலும் நியாய விலைக்கடைகளை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் திட்ட அலுவலர் கங்காதரணி சேர்மன் சத்யா கோவிந்தராஜ் ஒன்றிய கழகச் செயலாளர் கங்காதரன் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision