திருச்சி விஷன் செய்தி எதிரொலி - மத்திய பேருந்து நிலைய குப்பை தொட்டிகளை அகற்றிய மாநகராட்சி

திருச்சி விஷன் செய்தி எதிரொலி - மத்திய பேருந்து நிலைய குப்பை தொட்டிகளை அகற்றிய மாநகராட்சி

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஏராளமான பேருந்து பயணிகள் வந்து செல்லும் நிலையில் மத்திய பேருந்து நிலைய சென்னை பேருந்துக்கள் வரும் நுழைவாயிலில் இடது புறம் குப்பைகள் கொட்டப்பட்டு இருக்கிறது. மேலும் அங்கு பேருந்து பயணிகள் சிறுநீர் கழிக்கும் இடமாக மாறியுள்ளது. ஏற்கனவே மத்திய பேருந்து நிலையத்திற்குள் சிறுநீர் கழிக்கக்கூடாது என்றும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டும், இதை கண்காணிக்க மாநகராட்சி சார்பில் பணியாளர் நியமிக்கப்பட்டு இருந்தாலும் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள சென்னை மார்கத்திற்கு எதிரே உள்ள சாலை கடைகளில் உள்ள கழிவுகள் மத்திய பேருந்து நிலையம் உள்ளே கொட்டப்பட்டுகிறது. இங்கு நாள்தோறும் மாநகராட்சி அதிகாரிகள் வந்து சென்றாலும் இந்த அவலத்தை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Advertisement

மாற்றங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தற்பொழுது உள்ள அலட்சியதால் மத்திய பேருந்து நிலையம் முழுவதும் சுகாதாரமின்றி காணப்படுகிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் பேருந்து நிலையத்திற்குள் வந்ததும் மூக்கைப் பொத்திக்கொண்டு முகம் சுளித்து சென்று வருகின்றனர் என திருச்சி விஷனில் செய்தி வெளிட்டிருந்தோம்.

அதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள குப்பைகளை அள்ளியும், குப்பைத் தொட்டிகளை அங்கிருந்து அகற்றி வாகனத்தில் எடுத்து சென்றனர். மேலும் மத்திய பேருந்து நிலையத்தில் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர். இதனை மாநகராட்சி ஊழியர் புகைப்படம் எடுத்து நமக்கு அனுப்பினர்.

Advertisement