திருச்சி அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி - ஆட்சியர் எச்சரிக்கை!!

Jan 6, 2021 - 03:12
 2165
திருச்சி அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி - ஆட்சியர் எச்சரிக்கை!!

Advertisement

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அணியாப்பூர் கிராமத்தில் வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் இன்று முதல் (05/01/2021) வருகின்ற (11/01/2021) வரை தினமும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது.

Advertisement

அந்த சமயத்தில் மேற்கண்ட பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்கு கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக்கூடாது எனவும், இந்த பயிற்சி தளத்தில் யாரும் பிரவேசிக்க கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.