மதுரம் மருத்துவமனையினரின் தொடரும் உதவிகள் - மாவட்ட ஆட்சியரிடம் 1 லட்ச ரூபாய் நிதியுதவி!

மதுரம் மருத்துவமனையினரின் தொடரும் உதவிகள் - மாவட்ட ஆட்சியரிடம் 1 லட்ச ரூபாய் நிதியுதவி!

கொரோனாவை காரணம் காட்டி காசை மட்டும் பறிப்பதில் குறியாக இருக்கும் மருத்துவமனைகளுக்கு மத்தியில், கொரோனா ஆரம்பமானது முதல் இன்று வரை சுமார் 3000 குடும்பங்களுக்கு மேல் நிவாரண உதவிகளை அளித்து உயிர்காக்கும் மருத்துவமனைகளுக்கு மேல் ஒரு படி மேலாக செயல்பட்டு வருகின்றனர் இவர்கள். 

Advertisement

திருச்சியில் சுமார் 140 ஆண்டுகளாக மக்கள் நலனில் சிறந்த சேவையாற்றி வந்தவர்கள் மதுரம் மருத்துவமனையினர். உலகையே அச்சுறுத்தும் இந்த கொரோனா காலகட்டத்திலும் பல்வேறு உதவிகளை செய்து நெகிழ வைத்துள்ளனர்.

கொரோனா ஆரம்பமான மார்ச் மாதத்தில் தொடங்கிய இவர்களுடைய சமூகப்பணி ஏழு மாதங்களைக் கடந்து இன்றளவும் நீடித்து வருகிறது.திருச்சி மட்டுமல்லாது புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், ஈரோடு, சேலம், கரூர் என பல மாவட்டங்களில் 30 கிராமங்களை சந்தித்து சுமார் 30 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களையும், கோவிட் தொற்றில் இருந்து பாதுகாக்க வழிமுறைகளையும் நலத்திட்ட உதவிகளையும் செய்து உள்ளனர் என்றால் அது மிகையாகாது.

கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த 50 பயனாளிகளுக்கு 5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தையல் இயந்திரங்களும் வாங்கிக்கொடுத்து வாழ்வாதாரத்திற்கு அடித்தளமிட்டவர்கள் இந்த மதுரம் அறக்கட்டளையினர். அதனைத் தொடர்ந்து தற்போது திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் கீழ் இயங்கும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்க வளர்ச்சிக்காக ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியாக கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் மதுரம் மருத்துவமனை மற்றும் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் ஐவன் மதுரம் தலைமையில் மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் அறக்கட்டளையினர், மருத்துவர்கள் என மக்களுக்காக களத்தில் நின்று சமூகப் பணியாற்றி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY