உதயநிதி ஸ்டாலினுக்கு திருச்சியில் கும்ப மரியாதையுடன் வரவேற்பு- தி.மு.க கொடியை ஏற்றி வைத்தார்!

உதயநிதி ஸ்டாலினுக்கு திருச்சியில் கும்ப மரியாதையுடன் வரவேற்பு- தி.மு.க கொடியை ஏற்றி வைத்தார்!

திருச்சியில் தி.மு.க பிரமுகர்கள் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி வந்தார்.

Advertisement

மேல சிந்தாமணி பகுதியில் திருச்சி தி.மு.க தெற்கு மாவட்டம் சார்பில் அவருக்கு கும்ப மரியாதையுடன் குதிரைகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பெண்கள் மலர் தூவி அவரை வரவேற்றனர்.தொடர்ந்து அப்பகுதியில் தி.மு.க வின் கொடியை ஏற்றினார்.

அதன் பின்பு திருச்சி,மணப்பாறை திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்டு சென்றார். அவருடன் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் சட்ட மன்ற உறுப்பினருமான மகேஷ் பொய்யாமொழி மற்றும் இளைஞரணியினர் உடனிருந்தனர். திருச்சியில் நிகழ்ச்சிகளை முடித்த பின்பு திருக்குவளை செல்லும் உதயநிதி அங்கு தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY