ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா

ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பகளவாடி கிராமத்தில் எழுந்திருக்கும் பல நூறு வருடங்கள் பழமை வாய்ந்த 12 ராசிகளுடன் கூடிய சக்கரத்தின் மேல் சிவலிங்கம் அமையப்பெற்ற ஒரே திருக்கோயில் சித்தர் சிவ பீடம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 

கும்பாபிஷேத்தில் நான்கு கால யாகபூஜை, மஹா பூர்ணாஹீதி, யாத்ரா தானம் நடைபெற்று கடம் புறப்பட்டு அனைத்து மூலஸ்தான விமான கோபுரம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலஸ்தான ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பரிவாரமூர்த்திகள் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மஹா அபிஷேகம், மகாதீபாராதனை கட்டப்பட்டது.

இக்கோயிலை சுற்றி உள்ள கிராம பகுதியில் பொதுமக்கள் சுமார் 5,000-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் அருளை பெற்றுச் சென்றனர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision