ஜமாபந்தி நிகழ்ச்சியில் கடும் வாக்குவாதம் - சமாதானம் செய்த ஆட்சியர்

ஜமாபந்தி நிகழ்ச்சியில் கடும் வாக்குவாதம் - சமாதானம் செய்த ஆட்சியர்

திருச்சி திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று இறுதி நாளான மூன்றாம் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

மேலும் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக மன அளித்தினர். இதில் திருவெறும்பூர் பகுதியில் உள்ள கக்கன் காலனி பகுதியை சேர்ந்த பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் அந்தப் பகுதியில் இயங்கும் அரசு மதுபான கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.

மூதாட்டி ஒருவர் 30 வருடங்களுக்கு முன்பு தனது மகன் விபத்தில் இறந்ததற்கு இது நாள் வரை எந்த ஒரு இழப்பீடும் வழங்கவில்லை என மிகவும் கஷ்டத்தில் உள்ளதாகவும் ஏதாவது இழப்பீடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் ஆட்சியரிடம் மனு அளித்தார்.

துவாக்குடி வாழவந்தான் கோட்டை பகுதி காமாட்சி நகரை சேர்ந்த மக்கள் வீடுகளுக்கு வழங்கப்பட்ட சர்வே எண்கள் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரிகளின் கவனக்குறைவால் வருவாய்த்துறை கோப்புகளில் இருந்து அழிந்து விட்டதாகவும், அதனை மீண்டும் கோப்புகளில் ஏற்றி தருமாறு கோரி மனு அளித்தனர்.

இந்த முகாமிற்கு முறையான அறிவிப்பு இல்லாததால் திருவெறும்பூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இரண்டு நாட்கள் நடைபெற்ற முகாம் தெரியாததால் இன்று அனைத்து பகுதியிலிருந்து சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் மனு அளிக்க குவிந்தனர். இதனால் தாலுக்கா ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக அங்கு வந்து அனைத்து மக்களின் மனுக்களையும் ஒன்றாகப் பெற்றுக் கொண்டு அனைத்து மனுக்களையும் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலந்து சென்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision