திருச்சியில் 3 பேர் உடலுக்குள் 3 கிலோ தங்கம்.

திருச்சியில் 3 பேர் உடலுக்குள் 3 கிலோ தங்கம்.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான 3 பயணிகளை தனியே அழைத்துச் சென்று சோதனை செய்த போது அவர் தனது ஆசனவாயில் மறைத்து 3 கிலோ 85 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது.

மொத்தம் 1 கோடியே 85 லட்சத்து மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணிகளை கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision