"தமிழகத்தில் அதிமுக பெரும்பான்மையான கட்சி என்பதால் முதலமைச்சர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும்"- திருச்சியில் பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி!!

"தமிழகத்தில் அதிமுக பெரும்பான்மையான கட்சி என்பதால் முதலமைச்சர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும்"- திருச்சியில் பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி!!

Advertisement

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர், தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலுக்கு தரிசனம் செய்தார். தருமபுரம் ஆதீனத்தை சந்தித்து பேசிய பிறகு திருச்சி மலைக் கோட்டை வாசல் முன்பு செய்தியாளரை சந்தித்த அவர், 

Advertisement

"தமிழக மக்கள் எங்களுக்கு நல்ல ஆதரவு தருகிறார்கள். தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை காட்டிலும் தற்போது வலிமையாக உள்ளது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்.

தமிழக மக்கள் நலனில் நாங்கள் அக்கறை செலுத்துகிறோம். பிரதமர் மோடி பல நல்ல திட்டங்களை தமிழக மக்களுக்கு செய்கிறார்.தமிழக மக்களுக்கு உண்மையாக நாங்கள் நடந்துகொள்கிறோம். என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழக மக்களுக்கு தெரியும். தமிழகத்தில் அதிமுக பெரும்பான்மையான கட்சி, கூட்டணி பெரும்பான்மை அதிமுக என்பதால் என்பதால் முதலமைச்சர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும்.

Advertisement

தமிழக மக்களுக்கு நன்மை செய்ய பாஜக எண்ணுவதால் தமிழக மக்களிடம் பாஜகவிற்கு ஆதரவு இருக்கும்.ஓபிஎஸ், இபிஎஸ் அமித்ஷாவின் முன்னிலையில் கூட்டணி குறித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸ்,இபிஎஸ் எங்களுக்கு ஆதரவு தருகின்றனர்.கே.பி.முனுசாமியின் கருத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை" என்றார்