போட்டா போட்டி - திருச்சி அருகே புரோட்டா போட்டி!!

Advertisement
"பந்தயத்துக்கு நாங்களும் வரலாமா" என வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் புரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியை போலவே திருச்சி அருகே தோகைமலை பகுதி நெய்தலூர் காலனியில் சுதாகர் ஹோட்டலில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வித்தியாசமான முறையில் புரோட்டா சாப்பிடும் போட்டி நடத்தவுள்ளனர்.
Advertisement
வருகின்ற 13ம் தேதி புதன்கிழமை அன்று இப்போட்டியை நடத்த உள்ளனர். ஒரு நபர் 20 புரோட்டா சாப்பிட்டால் ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும், 20 புரோட்டாவை 15 நிமிடத்திற்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும், மது அருந்தி வர அனுமதியில்லை, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பணம் செலுத்த தேவையில்லை, போட்டியில் தோல்வி பெற்றவர்கள் புரோட்டாவுக்கு பணம் செலுத்த வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை வழங்கியுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய