புற்றுநோய் விழிப்புணர்வுக்காக மாணவர்களுக்கு ஆன்லைன் பாட்டு போட்டி!

புற்றுநோய் விழிப்புணர்வுக்காக மாணவர்களுக்கு ஆன்லைன் பாட்டு போட்டி!

மனித உடலிலுள்ள ஆய கலைகள் அனைத்தையும் ஒன்றிணைப்பது இந்த செல்கள் மட்டுமே. நடப்பது, ஓடுவது என அனைத்து செயல்களும் செய்ய வைப்பது செல்கள்தான். அந்த செல்களின் குறைவு ஏற்படும் போது தான் மனிதனுக்கு நோய் உண்டாகிறது. அதிலும் பல ஆண்டுகாலமாக மனிதனை வாட்டி வதைக்கும் முக்கியமான நோய் புற்றுநோய். இந்த நவீன ரசாயன உலகில் எதையெடுத்தாலும் இறுதியில் நோயில் வந்து முடியும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சிறியவர் முதல் பெரியவர் வரை புற்றுநோயால் பாதிக்கப்படும் செய்திகளை தினம் தோறும் நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

Advertisement

அந்த சிறியவர்களுக்காக TMRT108 எனும் தொண்டு நிறுவனம் பல்வேறு கட்டமாக முயற்சிகளை எடுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கரம் நீட்டி வருகின்றனர். புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளுக்கு உதவுவதற்காக இவர்கள் எடுக்கும் முன்னெடுப்பு ஆகச்சிறந்த ஒன்று. 

அந்த வகையில் TMRT108 தொண்டு நிறுவனம் வழங்கும் 12 முதல் 17 வயது வரையுள்ள மாணவர்களுக்கான ஆன்லைன் பாட்டுப்போட்டி #SINGFORHOPE.

என்னும் போட்டியை நடத்தவுள்ளனர்.

போட்டியில் பங்குபெறுங்கள், உங்கள் பாடலை நாங்கள் அளிக்கும் கூகிள் படிவத்தில் பதிவேற்றம் செய்யுங்கள். அதிகப்படியான லைக்குகளை குவிக்கும் பாடலுக்கு ஆச்சர்யமான பரிசுகள் காத்திருக்கின்றன. TMRT108 ஒரு இலாப நோக்கற்ற தொண்டுநிருவனம், காவேரி மருத்துவமனையுடன் இணைந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளுக்கு மருத்துவ நிதியை வழங்கி வருகிறது. மேலும் விபரங்களுக்கு இந்த இணைப்பை தொடரவும்.

www.tmrt108trust.com

முன்பதிவிற்கு

https://www.tmrt108trust.com/registration-form

முன்பதிவு செய்ய கடைசி நாள்

28 நவம்பர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறியhttps://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm