திருச்சியை ஒரே நாளில் பரப்பாக்கிய ஜி கார்னர் - ஜி ஸ்கொயர்

திருச்சியை ஒரே நாளில் பரப்பாக்கிய ஜி கார்னர் - ஜி ஸ்கொயர்

திருச்சி பொன்மலை ஜி கார்னர் இரயில்வே மைதானத்தில் ஓபிஎஸ் அணியின் முப்பெரும் விழா மாநாடு இன்று நடைபெற உள்ளது. சென்னை ராயபுரத்தில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகம் போன்ற தோற்றத்தில் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டுள்ளது.

அதிமுக தொடங்கப்பட்டு ஐம்பதாவது ஆண்டு நிறைவை பொன்விழாவாகவும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்கள் எம் ஜி ஆர், ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளை விழாவாகவும் கொண்டாடும் விதமாக முப்பெரும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டின் நடராஜன் வரவேற்புரை நிகழ்த்தவுள்ளார்.

மேலும், முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் மனோஜ் பாண்டியன், ஐயப்பன், ஜேசிடி.பிரபாகர், நாடாளுமன்ற உறுப்பினர் ஒ.பி.எஸ்.ரவீந்திரநாத் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

ஓபிஎஸ் தரப்பினர் நடத்தும் இந்த மாநாட்டில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் பங்கேற்க போவதில்லை என கூறப்படுகிறது.

திருச்சியில் திருவானைக்காவல், செம்பட்டு, மண்டையூர் மூன்று இடங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனம் வீட்டுமனைகளை விற்பனை செய்து வருகிறது. அவர்களுக்கான அலுவலகம் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள டேப் காம்ப்ளக்ஸில்(Tab complex) செயல்பட்டு வருகிறது. வருமானவரித்துறை அதிகாரிகள் தற்போது அங்கு சோதனையை துவக்கி உள்ளனர்.

G quare நிறுவனம் குறைந்த விலைக்கு இடங்களை வாங்கி அதிக விலைக்கு வீட்டு மனைகளாக பிரித்து விற்பதாக தகவல் கூறப்படுகிறது. சமீப காலத்தில் அதிகமான இடங்கள் வாங்கியது தொடர்பாகவும் சோதனை நடைபெறுவதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். G square ஊழியரிடம் விசாரணையை வாயிலில் நடத்தினர். பின்னர் அலுவலகம் திறக்கப்பட்டு வருமானவரித்துறை அதிகாரிகள் உள்ளே நுழைந்து தங்களது சோதனை துவக்கினர்.