8 ஆண்டுகளாக கட்டப்பட்ட பாலம் திறப்பு - மக்கள் நிம்மதி
திருச்சிராப்பள்ளி மாநகரில் அகலம் குறைந்த திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் இரயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக புதிய மேம்பாலம் அமைக்கும் பணி 2 கட்டங்களாக கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து திண்டுக்கல் சாலை, மத்திய பேருந்து நிலையப்பகுதி, ஜங்ஷன் இரயில் நிலையம் மற்றும் மதுரை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்டும் பணி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்கனவே கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் சென்னை - மதுரை சாலையை இணைக்கும் வகையிலான மன்னார்புரம் பகுதியில் இராணுவத்திற்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டதால் இந்த பகுதியில் அணுகு சாலை அமைக்க முடியாமல் இருந்தது. பல்வேறு கட்ட தொடர் நடவடிக்கைக்குப் பின் இராணுவத் துறைக்கு சொந்தமான நிலத்தின் மதிப்பான ரூ.8.45 கோடிக்கு சம மதிப்பிலான உட்கட்டமைப்பை அமைத்து தருகிறோம் என்பதன் அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செயலாக்கம் ஏற்பட்டதனை தொடர்ந்து அணுகு சாலை அமைக்க கடந்த (05.05.2022) அன்று இராணுவ நிலம் கிடைக்கப்பெற்றது.
நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் (14.05.2022) அன்று ரூ.3.53 கோடி மதிப்பிட்டில் அரிஸ்டோ மேம்பாலத்தின் சென்னை செல்லும் பகுதிக்கு அணுகு சாலை, இராணுவ நிலத்தை ஒட்டிய சுற்றுச்சுவர், சேவைச்சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பு போன்ற பணிகள் துவக்கி வைக்கப்பட்டு தற்சமயம் பணிகள் முடிவுற்றுள்ளது.
பாலத்தில் மின்விளக்கு பொருத்தும் பணிகள் மற்றும் பாலத்தில் சாலை பாதுகாப்பு பணிகள் போன்றவையும் முடிவுற்று நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (29.05.2023) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார், மாநகர காவல் ஆணையர் எம்.சத்தியப்பிரியா, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுகரசர், மாநகராட்சி ஆணையர் இரா.வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்திரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் த.இராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர்கள் கிருஷ்ணசாமி,
எம்.எஸ்.செல்வி (திட்டங்கள்) கோட்டப்பொறியாளர்கள், கேசவன், முருகானந்தம் (திட்டங்கள்), உதவி கோட்டப் பொறியாளர் சத்தியன், உதவி பொறியாளர்கள் ராஜ்குமார், ஸ்ரீராம், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn