காவலர்களுக்கு கூலிங் கிளாஸ் வழங்கிய வினோத் ஐ கேர் மருத்துவமனை
திருச்சி மாநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தங்கள் கண்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் குளிர் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
திருச்சி தில்லைநகர் வினோத் ஐ கேர் மருத்துவமனை இலவசமாக 150 முதல் 200 காவலர்களுக்கு கூலிங் கண் கண்ணாடிகளை MD. டாக்டர். வினோத் வழங்கினர். திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர காவல் ஆணையர் பங்கேற்று 200க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு மூக்கு கண்ணாடிகளை வழங்கினார். காவல் ஆணையர், உதவி ஆணையர், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோரும் கண்ணாடிகளை அணிந்து கொண்டனர்.
மேலும் ஸ்ரீரங்கம் ரோட்டரி கிளப் பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் இணைந்து குடிநீர் மற்றும் பழரச பாட்டில் மற்றும் மோர் ஆகியவை வழங்கினர். இதனை தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் செய்தியாளர்களிடம் கூறுகையில்.... திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக செயல்படும் மதுபான கூடங்களை (பார்) கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் பகுதி அதிக விபத்துகள் நடக்கும் பகுதியில் ஒன்றாக உள்ளதால், அங்கு சிக்னல் பொருத்தப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவே சிக்னல் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் மாநகரில் 21 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளிலும் இதுபோன்ற பிரத்யேக சிக்னல் அமைக்கப்பட உள்ளது.
இதேபோன்று போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாலை விதிகளை மீறுவோர் மீது தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்படுகிறது என்றார்.
மாநகர் முழுவதும் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டு போக்குவரத்து விதிகளை மீறுவதாக நாள்தோறும் 2000 வழக்குகள் வரை பதிவு செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn