பள்ளி திறப்பதற்கான தேதி நாளை (26.05.2023) அறிவிக்கப்படும் - திருச்சியில் அமைச்சர் மகேஸ் பேட்டி

பள்ளி திறப்பதற்கான தேதி நாளை (26.05.2023) அறிவிக்கப்படும் - திருச்சியில் அமைச்சர் மகேஸ் பேட்டி

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஆயத்த பணிகளை மேற்கொள்வதற்கான செயல் வீரர்கள் கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும்,

பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு (சென்னை தென்மேற்கு மாவட்ட கழக செயலாளர்), திருச்சி தெற்கு மாவட்ட பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். 

பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மகேஸ்....பள்ளிகள் திறப்பது குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுடன் இன்று ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், நாளை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பள்ளிகள் திறக்கப்படும் தேதி நாளை (26.05.2023) அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn